Pages

Wednesday, September 21, 2016

B1-02-B-04 - மார்க்கண்டேயர் - Markandeya

02-B-04

மார்க்கண்டேயர்
------------------------
முன்னொரு காலத்தில் மிருகண்டு என்று ஒரு முனிவர் இருந்தார். அவர் மனைவி பெயர் மருத்துவதி. அவர்களுக்கு நீண்ட காலமாகக் குழந்தை பிறக்கவில்லை. அவர்கள் சிவபெருமானை நோக்கித் தவம் செய்தனர். சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் கொடுத்தார். அதன்படி அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது.


இருவரும் மிகவும் மகிழ்ந்தனர். மிருகண்டு ரிஷியின் மகன் என்பதால் அவன் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்பட்டான். அவன் சிறந்த ஒழுக்கமும், பக்தியும், அறிவும் உடையவனாக வளர்ந்தான். மார்க்கண்டேயருக்குப் பதினாறு வயது நெருங்கியது. தாய்தந்தையர் இருவரும் கவலைப்படத் தொடங்கினார்கள். அதனை அறிந்த மார்க்கண்டேயர், "நீங்கள் ஏன் இவ்வளவு சோகமாக இருக்கின்றீர்கள்?" என்று கேட்டார். அப்போது அவர்கள், "மகனே! உனக்கு ஆயுள் பதினாறே ஆண்டுகள்தான். அதனால்தான் எங்களுக்கு வருத்தமாக இருக்கின்றது" என்று சொன்னார்கள்.


அவர்களைக் கவலைப்பட வேண்டா என்று சொல்லிவிட்டு, மார்க்கண்டேயர் பல தலங்களையும் தரிசித்து இறைவனை வழிபட்டார். சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்தார். பதினாறு வயது ஆனதும் எமதூதர்கள் வந்தார்கள். ஆனால் அவர்களால் மார்க்கண்டேயரை நெருங்க முடியவில்லை. அதன்பின், காலனே தன் எருமை வாகனத்தின்மேல் ஏறி அவரிடம் வந்தான்


சிவபூஜையில் இருந்த மார்க்கண்டேயர் காலனைப் பார்த்து அஞ்சினார். சிவலிங்கத்தைக் கட்டிக்கொண்டார். காலன் பாசத்தை அவர்மேல் வீசினான். அப்போது சிவலிங்கத்திலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டார். தம் இடது காலால் காலனுடைய மார்பில் உதைத்தார். காலன் தரையில் விழுந்து இறந்தான். என்றும் இறவாமல் வாழும்படி மார்க்கண்டேயருக்குச் சிவபெருமான் அருள்புரிந்தார்.
(
பிறகு காலனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்). காலனுக்கே காலன் ஆனதால் சிவபெருமான் காலகாலன் என்று போற்றப்படுகின்றார்.


மார்க்கண்டேயருக்காகக் காலனை உதைத்து அருளிய தலம் திருக்கடவூர் ஆகும்.


வம் = "tapas" - severe religious penance; = மனம் ஒன்றி இறைவனை நோக்கி நோன்பு இருத்தல்;
ம் = boon = தெய்வ அருளால் பெறும் ஆற்றல்கள், பேறுகள்;
ஒழுக்கம் = good conduct; virtue; = நன்னடத்தை; கடமை தவறாமல் வாழும் குணம்;
நெருங்குதல் = to approach; to get close; = சமீபம் ஆதல்;;
கவலைப்படுதல் = to worry; = மனம் சஞ்சலப்படுதல்;
சோகம் = sad; = மனவருத்தம்;
ஆயுள் = lifespan = வாழ்நாள்;
கவலைப்பட வேண்டா = do not worry; = வருந்த வேண்டா;
எமதூதர்கள் = servants of Yama, the lord of death; = காலனுடைய ஏவலாளர்கள்;
அதன்பின் = after that; later; = அதற்குப் பிறகு; அப்புறம்;;
காலன் = Yama, the lord of death; = யமன்; கூற்றுவன்;
எருமை = water buffalo; = ;
வாகனம் = vehicle; animal to ride on; = ஊர்தி;
அஞ்சுதல் = to be frightened; to be scared; = பயப்படுதல்;
கட்டிக்கொள்ளுதல் = to hug; to embrace; = தழுவுதல்; அணைத்துக்கொள்ளுதல்;
பாசம் = the noose that Yama carries; = காலன் கையில் இருக்கும் கயிறு;;
வெளிப்படுதல் = to come out; to be revealed; = வெளியே வருதல்; வெளிப்படத் தோன்றுதல்;
இறவாமல் = without dying; = இறத்தல் இன்றி; சாவாமல்;



"கடவுள் அருளால் சாவையும் வெல்லலாம்"

==============

Markandeya
----------------------------
Once upon a time, there lived a sage called Mrikandu. His wife's name was Marudvathi. They did not have a child for a long time. They prayed to Siva. Siva gave them a boon. Accordingly, a male child was born to them.

They both rejoiced. As he was son of Mrikandu, the child came be known as Markandeya. He grew up as a boy of great virtue, devotion, and wisdom. Markandeya was getting close to sixteen years of age. Both parents started worrying. Markandeya realized that and asked them, "Why are you both feeling so sad?". They told him, "Dear son! You will live for only sixteen years. That is why we are feeling sad".

He told them not to worry and went on a pilgrimage worshiping Siva at many holy places. He did intense penance. As soon as he turned sixteen, the servants of Yama came. But they could get near Markandeya. After that, Yama himself came riding on his water buffalo.

Markandeya, who was in the midst of his Siva worship, got frightened upon seeing Yama. He hugged the Sivalingam tightly. Yama threw his noose on Markandeya. At that instant, Siva came out of the Sivalingam. He kicked Yama on his chest with His left foot. Yama fell down and died. Siva blessed Markandeya to live forever without dying. (Later, Siva gave back Yama's life). As Siva became Kala (death) to Kala (Yama), Siva is praised as Kalakala. Thirukkadavur is the place where Siva kicked Yama to save Markandeya.


Markandeya - "mārkaṇḍēya"
Mrikandu - "mr̥kaṇḍu"
Marudvathi - "marudvati"
Yama - "yama"
Kala - "kāla"
Kalakala - "kālakāla"
Thirukkadavur - "tirukkaḍavūr"

"With God's grace one can defeat even death"

==============

No comments:

Post a Comment