01-14
எந்தாயும்,
எனக்கு
அருள்
------------------------
எந்தாயும்,
எனக்கு
அருள் தந்தையும் நீ;
சிந்தாகுலம்
ஆனவை தீர்த்து எனை ஆள்;
கந்தா;
கதிர்
வேலவனே;
உமையாள்
மைந்தா;
குமரா;
மறை
நாயகனே.
-
( கந்தர்
அனுபூதி -
46 )
கந்தனே;
ஒளி
படைத்த வேலாயுதத்தை உடையவனே;
உமையம்மையின்
திருமகனே;
என்றும்
இளையவனே;
வேத
நாயகனே;
என்
தாயும் நீ;
எனக்கு
அருள்கின்ற தந்தையும் நீ;
என்
மனக்கவலைகளை எல்லாம் தீர்த்து
என்னை ஆட்கொள்வாயாக;
எந்தாயும்
-
our
mother and;
- எம்
தாயும்;
அருள்
-
bestowing
grace;
showing mercy;
- அருள்கின்ற;
சிந்தாகுலம்
-
worry;
deep
sorrow;
- மனக்கவலை;
தீர்த்து
-
remove;
destroy; - போக்கி;
அழித்து;
ஆள்
-
To
receive or accept, as a protégé; - ஆட்கொள்ளுதல்;
அடியவனாக
ஏற்றுக்கொள்ளுதல்;
கந்தன்
-
skanda;
- முருகன்
திருப்பெயர்களுள் ஒன்று;;
கதிர்
வேல் -
bright
shiny lance; - ஒளியுடைய
வேல்;
உமையாள்
-
"umādēvi";
- உமாதேவி;
மைந்தன்
-
son;
- மகன்;
குமரன்
-
Young
man, youth;
- இளைஞன்;
மறை
-
Veda
("vēda");
- வேதம்;
நாயகன்
-
Lord,
master, chief;
- தலைவன்;
"கடவுள்
நம் கவலைகளைத் தீர்ப்பார்"
==============
endāyum,
eṉakku aruḷ
------------------------
endāyum,
eṉakku aruḷ tandaiyum nī;
sindāgulam
āṉavai tīrttu eṉai āḷ;
kandā;
kadir vēlavaṉē; umaiyāḷ
maindā;
kumarā; maṟai nāyagaṉē.
-
( kandar aṉubūdi - 46 )
O
Muruga! O Skanda! O Lord holding a shiny lance! O son of Uma! O
Youngster! O Lord of the Vedas!
You
are my Mother; You are my Father bestowing grace on me;
Please
take me as your devotee and destroy my worries (- i.e. grant me
happiness);
endāyum
- our mother and;
aruḷ
- bestowing grace; showing mercy;
sindāgulam
- worry; deep sorrow;
tīrttu
- remove; destroy;
āḷ
- To receive or accept, as a protégé;
kandaṉ
- Skanda ("skanda");
kadir
vēl - bright shiny lance;
umaiyāḷ
- umādēvi;
maindaṉ
- son;
kumaraṉ
- Young man, youth;
maṟai
- Veda ("vēda");
nāyagaṉ
- Lord, master, chief;
"God
will rid us of worries"
==============
No comments:
Post a Comment