02-A-09
யானை,
சிலந்தி
வழிபட்டது -
திருவானைக்கா
வரலாறு
------------------------
திருச்சிராப்பள்ளி
அருகே காவிரிக் கரையில்
திருவானைக்கா என்ற தலம்
உள்ளது.
முற்காலத்தில்
அது வனமாக இருந்தது.
அங்கு
ஒரு வெண்ணாவல் மரத்தின்கீழ்
ஒரு சிவலிங்கம் இருந்தது.
அதனை
ஒரு யானையும் சிலந்தியும்
வழிபட்டு வந்தன.
சிவலிங்கத்தின்மேல்
சருகுகள் உதிராதபடி சிலந்தி
தன் வலையைப் பின்னியது.
யானை
துதிக்கையில் நீரை முகந்துகொண்டு
வந்து அபிஷேகம் செய்து,
பூக்களைப்
பறித்துத் தூவி வழிபட்டுவந்தது.
அப்படி
அபிஷேகம் செய்யும்போது அந்தச்
சிலந்திவலை அழிபடும்.
அதன்
பிறகு,
சிலந்தி
மீண்டும் தன் வலையைப் பின்னும்.
இப்படியே
பல நாள்கள் கழிந்தன.
யானை
தினமும் தன் வலையை அழிப்பதைக்
கண்டு,
சிலந்தி
ஒரு நாள் மிகவும் கோபம் கொண்டது.
அன்று
யானை வந்தபொழுது அதன்
துதிக்கையினுள் புகுந்து
ஏறி அதனைக் கடித்தது.
வலி
தாளாத யானை துதிக்கையை நிலத்தில்
அடித்து மோதி விழுந்து இறந்தது.
அப்போது
சிலந்தியும் அடிபட்டு இறந்தது.
சிவபெருமான்
யானைக்கு முக்தி கொடுத்தார்.
சிலந்தியைச்
சோழமன்னர் குலத்தில் பிறக்கச்
செய்தார்.
அச்சிலந்தி
மறுபிறப்பில் சோழன் மகனாகப்
பிறந்தது.
பிறந்த
குழந்தையின் கண்கள் சிவந்திருந்ததால்
தாய்,
"என்
கோச் செங்கண்ணனோ"
என்றாள்.
அதுமுதல்
அவர் கோச்செங்கட் சோழன் என்றே
அழைக்கப்பட்டார்.
அவர்
முற்பிறவியில் செய்த சிவத்தொண்டின்
பயனாக இப்பிறப்பிலும்
சிவபக்தியில் சிறந்து
விளங்கினார்.
திருவானைக்காவில்
ஈசனுக்குக் கோயில் கட்டினார்.
வேறு
பல தலங்களிலும் சிவபெருமானுக்கு
மாடக்கோயில்கள் கட்டினார்.
கொச்செங்கட்
சோழரைத் திருமங்கை ஆழ்வார்
தம் பாடலில் சிறப்பித்துப்
பாடி உள்ளார்.
திருஞான
சம்பந்தரும்,
திருநாவுக்கரசரும்,
சுந்தரரும்
தேவாரப் பாடல்களில் கோச்செங்கட்
சோழரைச் சிறப்பித்துப் பாடி
உள்ளனர்.
அறுபத்து
மூன்று நாயன்மார்களுள்
ஒருவராகக் கோச்செங்கட் சோழ
நாயனார் போற்றப்படுகின்றார்.
வரலாறு
=
history;
=
சரித்திரம்;
திருவானைக்கா
=
"tiruvāṉaikkā"
- A place near Tiruchirappalli = திரு
+
ஆனை
+
கா
-
திருச்சிராப்பள்ளி
அருகே காவிரியின் நடுவே தீவாக
அமைந்துள்ள தலம்.
முற்காலம்
=
once
upon a time
=
பல
ஆண்டுகளுக்கு முன்பு;
வனம்
=
forest
=
காடு;
வெண்ணாவல்
=
A
kind of rose-apple, m. tr., Eugenia hemispherica;
=
நாவல்வகை;
சிலந்தி
=
spider;
=
;
சருகு
=
Dried
leaf;
=
உலர்ந்து
வற்றிய இலை;
உதிர்தல்
=
To drop off, as leaves, fruits;
=
இலை,
பழம்
முதலியன தானே கீழே விழுதல்;
வலை
=
web;
=
;
துதிக்கை
=
elephant's
trunk;
=
தும்பிக்கை;
முகத்தல்
=
To
draw, as water;
=
மொள்ளுதல்;
அழிபடுதல்
=
to
be destroyed;
=
சிதைதல்;
பின்னுதல்
=
to
weave;
=
;
தாளாத
=
unable
to bear;
=
பொறுக்கமுடியாத;
இறத்தல்
=
to
die;
=
சாதல்;
முக்தி
=
liberation;
=
வீடுபேறு;
சோழமன்னர்
குலம் =
family
of Chola king;
=
சோழநாட்டு
அரசர் குடும்பம்;
மறுபிறப்பு
=
next
birth;
=
அடுத்த
பிறவி;
கோ
=
king;
=
அரசன்;
ராஜா;
செங்கண்ணன்
=
red
eyed person;
=
சிவந்த
கண்களை உடையவன்;
அழைக்கப்படுதல்
=
to
be called as;
=
பெயரிட்டுக்
கூப்பிடுதல்;
முற்பிறவி
=
prior
birth;
=
இப்பிறவிக்கு
முன்பு இருந்த பிறப்பு;
சிவத்தொண்டு
=
service
to Siva;
=
சிவபெருமானுக்குச்
செய்யும் திருத்தொண்டு;
பயன்
=
result;
=
பலன்;
மாடக்கோயில்
=
elevated
temples built on artificial hillock;
=
உயரமாகக்
கட்டுமலைமேல் அமைந்த கோயில்;
சிறப்பித்தல்
=
to
praise; to admire; to extol;
=
புகழ்தல்;
பாராட்டுதல்;
கொண்டாடுதல்;
போற்றப்படுதல்
=
to
be cherished;
=
துதிக்கப்படுதல்;
வணங்கப்படுதல்;
"எவர்
எப்படி வழிபட்டாலும் இறைவன்
அருள்செய்வான்"
============================
Worship
by elephant and spider - Thiruvanaikka history
-------------------------------------------
Thiruvanaikka
("tiruvāṉaikkā") is a place near Tiruchirappalli
("tiruccirāppaḷḷi"). A long time ago it was a forest.
There was a sivalingam under a rose-apple tree. An elephant and a
spider used to worship that sivalingam. The spider spun a web above
the sivalingam to prevent dried leaves from falling on it. The
elephant brought water in its trunk and did abhishekam ("abhiṣēka")
with it and put flowers on the sivalingam. In this process, the
spider web got destroyed. The spider built the web again after that.
This kept repeating for many days.
After
seeing the elephant destroy its web everyday, one day the spider got
very angry. That day, when the elephant came, the spider climbed into
its trunk and bit it. The elephant could not bear the pain. It beat
its trunk on the ground, fell down, and died. The spider also died at
that time.
Siva
granted liberation ("mōkṣa") to that elephant. He made
that spider take birth in the family of Chola king.
That
spider, in its next birth, was born as son of Chola king. The
newborn's eyes were red. When the mother saw that, she exclaimed, "My
prince is red-eyed!". From then on, he came to be known as
Kochengat Chola ("kōcceṅkaṭ cōḻa"). (That name
means "the red-eyed Chola king"). On account of his service
to Siva in his prior birth, he was a great Siva devotee in this birth
too. He built a Siva temple in Thiruvanaikka. He built elevated
temples for Siva at many places.
Thirumangai
Azhwar ("tirumaṅgai āḻvār") has praised Kochengat
Chola in his song. Thirugnana Sambandar ("tiruñāṉa
sambandar") , Thirunavukkarasar ("tirunāvukkarasar"),
and Sundarar ("sundarar") have mentioned Kochengat Chola in
their Thevaram ("tēvāram") songs. Kochengat Chola is
cherished as one of the 63 nayanmars ("nāyaṉmār" -
canonized devotee of Siva).
"God
bestows His grace on devotees regardless of who they are and their
mode of worship"
==============
No comments:
Post a Comment