01-03
துஞ்சலும்
துஞ்சல் இலாத
------------------------
துஞ்சலும்
துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம்
நைந்து நினைமின் நாள்தொறும்;
வஞ்சகம்
அற்று அடி வாழ்த்த,
வந்த
கூற்று
அஞ்ச
உதைத்தன அஞ்செழுத்துமே.
-
( சம்பந்தர்
தேவாரம் -
3.22.1 )
தூங்கும்
பொழுதும்,
விழித்திருக்கும்
பொழுதும்,
(இரவும்
பகலும்)
மனம்
உருகித் தினமும் திரு-ஐந்தெழுத்தை
நினையுங்கள்.
தூய
உள்ளத்தோடு இறைவனையே நினைத்து
அவன் திருவடிகளை வணங்கிய
மார்க்கண்டேயரின் உயிரைக்
கவர வந்த எமனை உதைத்து அழித்தது
"நமச்சிவாய"
என்ற
திருவைந்தெழுத்தே.
துஞ்சல்
-
sleeping;
- உறங்குதல்;
தூங்குதல்;
இலாத
-
not;
- இல்லாத;
போழ்து
-
during;
while; - பொழுது;
சமயம்;
நெஞ்சகம்
-
heart;
mind; - மனம்;
நைதல்
-
to
melt;
to
have intense
devotion; - இளகுதல்;
உருகுதல்;
(நைந்து
-
melting;
with intense devotion; - இளகி;
உருகி;);
நினைதல்
-
to
think;
- நினைத்தல்;
எண்ணுதல்;
(நினைமின்
-
you
think;
- நீங்கள்
நினையுங்கள்;)
நாள்தொறும்
-
daily
- தினமும்;
வஞ்சகம்
-
deception;
cunningness; - பொய்;
கபடம்;
அற்று
-
without;
free of; - இல்லாமல்;
கூற்று
-
Yama,
lord of death; - எமன்;
அஞ்ச
-
to
feel frightened;
- பயப்படும்படி;
உதைத்தல்
-
to
kick;
- ; (உதைத்தன
-
they
kicked;)
அஞ்செழுத்து
-
the
five
letters "namasivāya";
- 'நமச்சிவாய'
என்ற
ஐந்து எழுத்துகள்;
"நமச்சிவாய
மந்திரத்தைச் சொல்வார்க்கு
எமபயம் இல்லை"
==============
tuñjalum
tuñjal ilāda
------------------------
tuñjalum
tuñjal ilāda pōḻdiṉum
neñjagam
naindu niṉaimiṉ nāḷdoṟum;
vañjagam
aṭru aḍi vāḻtta, vanda kūṭru
añja
udaittaṉa añjeḻuttumē.
-
( sambandar tēvāram - 3.22.1 )
When
you are asleep and when you are awake, remember the holy five letters
'namasivāya' with intense devotion every day.
Markandeya,
with a pure heart, worshiped Siva's holy feet.
When
Yama came to kill Markandeya, Siva appeared there frightening Yama
and kicked Yama on his chest.
tuñjal
- sleeping;
pōḻdu
- during; while;
neñjagam
- heart; mind;
naindu
- melting; with intense devotion;
niṉaimiṉ
- you think;
nāḷdoṟum
- daily;
vañjagam
- deception; cunningness;
aṭru
- without; free of;
kūṭru
- Yama, lord of death;
añja
- to feel frightened;
añjeḻuttu
- five letters "namasivāya";
"Yama
will not come near devotees who cherish the holy five letters
namasivāya"
==============
No comments:
Post a Comment