02-A-01
திருஞான
சம்பந்தர் -
ஞானப்பால்
உண்டது
------------------------
கிட்டத்தட்ட
ஆயிரத்து நானூறு (1400)
ஆண்டுகளுக்கு
முன் தென்னிந்தியாவில்
பரசமயங்கள் ஓங்கியிருந்தன.
வேதநெறி
குன்றியிருந்தது.
சீகாழியில்
வாழ்ந்த சிவபாத இருதயரும்
பகவதியாரும் வேதநெறி தழைக்க
ஒரு மகனை வேண்டினார்கள்.
ஈசன்
அருளால் அவர்களுக்குச்
சம்பந்தர் என்ற ஒரு மகனார்
பிறந்தார்.
சம்பந்தருக்கு
மூன்று வயது இருக்கும்பொழுது
ஒரு நாள் அவர் தந்தையார்
கோயில் குளத்தில் குளித்து
வழிபாடு செய்யக் கிளம்பினார்.
சம்பந்தரும்
உடன்போக வேண்டும் என்றும்
அழுதார்.
அதனால்
குழந்தையையும் அழைத்துக்கொண்டு
சிவபாத இருதயர் சென்றார்.
குளக்கரையில்
சம்பந்தரை இருத்தினார்.
பின்
தந்தையார் தீர்த்தத்தில்
மூழ்கி மந்திரங்கள் செபிக்கத்
தொடங்கினார்.
தந்தையாரைக்
காணாமல் சம்பந்தர் கோயில்
கோபுரத்தைப் பார்த்து 'அம்மே
அப்பா'
என்று
அழ ஆரம்பித்தார்.
உடனே
சிவபெருமானும் உமாதேவியும்
குளக்கரையில் எழுந்தருளினார்கள்.
உமாதேவியார்
தம் திருமுலைப்பாலை ஒரு
பொற்கிண்ணத்தில் ஏந்திச்
சம்பந்தருக்கு ஊட்டியருளினார்.
அதனை
உண்ட உடனே சம்பந்தர் எல்லா
ஞானங்களும் பெற்றார்.
பின்
கரையேறிய தந்தையார்,
சம்பந்தர்
முகத்தில் பால் வழிந்திருப்பதைப்
பார்த்தார்.
"யார்
கொடுத்த பாலை உண்டாய்?"
என்று
அவரைக் கோபித்து வினவினார்.
சம்பந்தர்
தம் கைவிரலால் அம்மையப்பரைச்
சுட்டிக் காட்டினார்.
அவர்
தந்தையார் கண்களுக்கு
அம்மையப்பர் தென்படவில்லை.
பின்
சம்பந்தர்,
"தோடுடைய
செவியன்"
என்று
தொடங்கி அம்மையப்பரின்
அடையாளங்களைச் சொல்லிப்
பதிகம் பாடி அருளினார்.
அதனைக்
கேட்ட தந்தையார் தம் மகனார்
ஈசன் அருள்பெற்றதை உணர்ந்தார்.
அன்று
முதல் சம்பந்தர்,
"திருஞான
சம்பந்தர்"
ஆனார்.
அவர்
பல தலங்களுக்கும் சென்று
பதிகங்கள் பாடி வழிபட்டார்.
சைவமும்
தமிழும் ஓங்கின.
கிட்டத்தட்ட
=
approximately;
nearly; = ஏறக்குறைய;
ஆண்டு
=
year;
= வருடம்;
பரசமயம்
=
alien
religion = புறமதம்;
வேதநெறி
=
vedic
path; vadika dharma = வேத
மதம்;
குன்றுதல்
=
to
diminish; to be weakened;
To fall from high position;
= குறைதல்;
நிலைகெடுதல்;
சீகாழி
=
sirkali
= சிதம்பரத்தின்
தெற்கே உள்ள சீர்காழி என்ற
ஊர்;
தழைத்தல்
=
to
flourish;
= செழித்தல்;
உடன்போதல்
=
to
accompany;
= கூடச்
செல்லுதல்;
இருத்துதல்
=
To
make
one sit;
= உட்காரவைத்தல்;
தீர்த்தம்
=
holy
water;
= கோயில்
குளம்,
ஆறு
முதலிய புண்ணிய நீர்நிலை;
செபித்தல்
=
to
chant;
= மந்திரங்களை
ஜபம் செய்தல்;
எழுந்தருளுதல்
=
God
appearing in a place;
= கடவுள்
ஓரிடத்தில் தோன்றுதல்;
வருதல்;
பொற்கிண்ணம்
=
golden
cup;
= தங்கக்
கிண்ணம்;
வினவுதல்
=
to
ask;
= கேள்வி
(வினா)
கேட்டல்;
அம்மையப்பர்
=
God who is the mother and father;
= தாயும்
தந்தையும் ஆகிய இறைவன்;
தென்படுதல்
=
to
be visible;
= கண்ணுக்குத்
தெரிதல்;
தோடுடைய
செவியன் =
He
who wears an earring
- Siva
in half male half female form;
= ஒரு
காதில் தோட்டினை அணிந்த
அர்த்தநாரீஸ்வரன்;
அடையாளம்
=
mark,
symbol;
= குறிகள்;
பதிகம்
=
a
set of 10 songs;
= பத்துப்
பாட்டுகள் உள்ள ஒரு தொகுப்பு;
ஓங்குதல்
=
To
flourish;
= தழைத்தல்;
"இறைவனே
நமக்குத் தாயும் தந்தையும்
ஆவார்"
==============
Sambandar
- drinking milk of knowledge
----------------------------
About
1400 years ago, alien religions were strong in south India. The Vedic
dharma was in decline. Sivapada Hrudayar and Bhagavathiyar, who lived
in Sirkali, prayed for a son who could make Vedic dharma flourish
again. With God's grace, Sambandar was born to them.
When
Sambandar was about 3 years of age, one day his father was getting
ready to go to the temple pond for his bath and prayers. Sambandar
cried and wanted to go along with him. So, Sivapada Hrudayar took his
son along. He made Sambandar sit on the banks of the temple pond. The
father then went into the pool and immersed himself in the water and
started chanting his prayers.
When
Sambandar could no longer see his father, he looked at the temple
tower and started crying, calling out "O mother! O father!".
Immediately Lord Siva and Uma appeared there on the banks of that
pond. Goddess Uma took her milk in a golden cup and fed Sambandar. As
soon as he drank that milk, Sambandar got all the knowledge.
Then
his father came out of the pond. He saw traces of milk on Sambandar's
face. He angrily asked Sambandar, "Who gave you milk?"
Sambandar pointed to the divine Mother and Father with his finger.
Lord Siva and Uma were not visible to Sambandar's father. Then,
Sambandar started singing, describing the symbols of divine Mother
and Father, and a sang a padhigam (set of songs) starting with the
words "Thodudaiya seviyan" ("He who wears an earring
on one ear"). When Sivapada Hrudayar heard that song he realized
that his son had received God's grace.
From
that day onward, Sambandar came to be known as "Thirugnana
Sambandar". He went on pilgrimages to many temples and sang
'padhigams'. Saivam and Tamil flourished.
Sivapada
Hrudayar - "sivapāda hrudayar"
Bhagavathiyar
- "bhagavatiyār"
Sirkali
- "sīrgāḻi"
Sambandar
- "sambandar"
padhigam
- "padigam" - a set of songs. Usually 10. Sambandar
padhigams were usually 11 songs.
Thodudaiya
seviyan - "tōḍuḍaiya seviyaṉ"
Thirugnana
Sambandar - "tiruñāṉa sambandar "
"God
is our mother and father"
==============
No comments:
Post a Comment