01-01
நால்வர்
துதி
------------------------
பூழியர்
கோன் வெப்பு ஒழித்த புகலியர்
கோன் கழல் போற்றி
ஆழி
மிசைக் கல் மிதப்பில் அணைந்த
பிரான் அடி போற்றி
வாழி
திரு நாவலூர் வன்தொண்டர்
பதம் போற்றி
ஊழி
மலி திரு வாதவூரர் திருத்தாள்
போற்றி
-
( உமாபதி
சிவம் )
பாண்டிய
அரசனின் ஜுரத்தைத் தீர்த்த
திருஞான சம்பந்தர் திருவடிகளுக்கு
வணக்கம்.
கடல்மேல்
ஒரு கல்லே தெப்பமாக மிதந்து
கரை அடைந்த திருநாவுக்கரசர்
திருவடிகளுக்கு வணக்கம்.
திருநாவலூரில்
அவதரித்த சுந்தரர் திருவடிகளுக்கு
வணக்கம்.
என்றும்
நிலைத்த புகழ் உடைய மாணிக்க
வாசகர் திருவடிகளுக்கு
வணக்கம்.
நால்வர்
-
The
four gurus - சமயக்
குரவர்கள் நால்வர் -
திருஞான
சம்பந்தர்,
திருநாவுக்கரசர்,
சுந்தரர்,
மாணிக்க
வாசகர்;
துதி
-
praise;
Words of salutation; - ஸ்துதி;
ஸ்தோத்திரம்;
வணக்கமொழி;
கோன்
-
chief;
king;
- தலைவன்;
பூழியர்
கோன் -
Pandya
king - பாண்டிய
மன்னன்;
வெப்பு
-
fever;
- ஜுரம்;
காய்ச்சல்;
புகலியர்
கோன் -
tiruñāṉa
sambandar
- புகலி
என்ற பெயரும் உடைய சீகாழியில்
அவதரித்த திருஞான சம்பந்தர்;
கழல்
-
an
ornament symbolizing
valor - that is worn
on
men's
ankle; Here it means foot;
- வீரக்கழலை
அணிந்த திருவடி;;
போற்றி
-
I
worship; I cherish;
- வணக்கம்;
ஆழி
-
sea
- கடல்;
மிசை
-
on;
- மேல்;
மிதப்பு
-
floating;
boat, raft; - நீரின்மேல்
மிதத்தல்;
தெப்பம்;
அணைதல்
-
to
reach
a place;
- (ஓர்
இடத்தைச்)
சேர்தல்;
சென்று
அடைதல்;
பிரான்
-
chief;
master; - தலைவன்;
அடி
-
foot;
- பாதம்;
வாழி
-
'Long
live' - வாழ்க;
வன்தொண்டர்
-
sundarar,
who spoke harsh words;
- "எம்மோடு
வன்மையான சொற்களைச் சொல்லி
வழக்கிட்டமையால்,
'வன்தொண்டன்'
என்னும்
பெயரைப் பெற்றாய்"
என்று
ஈசனார் மொழிந்தருளினார் -
சுந்தரர்;
பதம்
-
foot;
- பாதம்;
ஊழி
-
eon;
a long time; - யுகம்;
நெடுங்காலம்;
மலிதல்
-
to
be full; to be plentiful;
- மிகுதல்;
நிறைதல்;
ஊழி
மலி -
everlasting
fame;
- நீண்ட
புகழுடைய;
திரு
-
holy;
- தெய்வத்தன்மை;
தாள்
-
foot;
- பாதம்;
"நமக்கு
நல்வழியைக் காட்டும் குருமார்களை
வணங்குவோம்"
==============
nālvar
tudi
------------------------
pūḻiyar
kōṉ veppu oḻitta pugaliyar kōṉ kaḻal pōṭri
āḻi
misaik kal midappil aṇainda pirāṉ aḍi pōṭri
vāḻi
tiru nāvalūr vaṉtoṇḍar padam pōṭri
ūḻi
mali tiru vādavūrar tiruttāḷ pōṭri
-
( umāpati sivam )
I
worship the feet of Thirugnana Sambandar ("tiruñāṉa
sambandar") who cured pāṇḍiya king's fever.
I
worship the feet of Thirunavukkarasar ("tirunāvukkarasar")
who caused a stone to float on the sea and reached the shore.
I
worship the feet of Sundarar ("sundarar") who is known as
the rough devotee.
I
worship the feet of Manika vasagar ("māṇikka vāsagar")
who has eternal fame.
nālvar
- The four gurus - Thirugnana Sambandar,
Thirunavukkarasar, Sundarar, Manikka Vasagar;
pūḻiyar
kōṉ - Pandya king; (kōṉ - chief);
pugaliyar
kōṉ -
tiruñāṉa sambandar who hails from the town of pugali (Sirkazhi);
pōṭri
- I worship; I cherish;
āḻi
misai - on the
sea;
pirāṉ
- chief; master;
vāḻi
- a phrase meaning 'Long live';
vaṉtoṇḍar
- sundarar; (Sundarar spoke harsh words when Siva appeared as an old
man and claimed him to be His slave. So, Siva gave Sundarar the name
'vaṉ toṇḍaṉ');
ūḻi
mali - everlasting fame; (ūḻi - yugam; a very long
time);
"We
worship the teachers (guru) who show us the right path"
==============
Very detailed explanation. Beautiful. Thank you.
ReplyDeleteGood share sir
ReplyDeleteThank you🙏
ReplyDeleteThank you for the detailed explanation. Kept singing it and knew perhaps each line is for one…however, to have this kind of explanation feels like being taught Tamil all over again(in a positive note only!).
ReplyDelete