Pages

Wednesday, September 21, 2016

B1-02-A-09 யானை, சிலந்தி வழிபட்டது - Worship by elephant and spider

02-A-09

யானை, சிலந்தி வழிபட்டது - திருவானைக்கா வரலாறு
------------------------
திருச்சிராப்பள்ளி அருகே காவிரிக் கரையில் திருவானைக்கா என்ற தலம் உள்ளது. முற்காலத்தில் அது வனமாக இருந்தது. அங்கு ஒரு வெண்ணாவல் மரத்தின்கீழ் ஒரு சிவலிங்கம் இருந்தது. அதனை ஒரு யானையும் சிலந்தியும் வழிபட்டு வந்தன. சிவலிங்கத்தின்மேல் சருகுகள் உதிராதபடி சிலந்தி தன் வலையைப் பின்னியது. யானை துதிக்கையில் நீரை முகந்துகொண்டு வந்து அபிஷேகம் செய்து, பூக்களைப் பறித்துத் தூவி வழிபட்டுவந்தது. அப்படி அபிஷேகம் செய்யும்போது அந்தச் சிலந்திவலை அழிபடும். அதன் பிறகு, சிலந்தி மீண்டும் தன் வலையைப் பின்னும். இப்படியே பல நாள்கள் கழிந்தன.


யானை தினமும் தன் வலையை அழிப்பதைக் கண்டு, சிலந்தி ஒரு நாள் மிகவும் கோபம் கொண்டது. அன்று யானை வந்தபொழுது அதன் துதிக்கையினுள் புகுந்து ஏறி அதனைக் கடித்தது. வலி தாளாத யானை துதிக்கையை நிலத்தில் அடித்து மோதி விழுந்து இறந்தது. அப்போது சிலந்தியும் அடிபட்டு இறந்தது.


சிவபெருமான் யானைக்கு முக்தி கொடுத்தார். சிலந்தியைச் சோழமன்னர் குலத்தில் பிறக்கச் செய்தார்.


அச்சிலந்தி மறுபிறப்பில் சோழன் மகனாகப் பிறந்தது. பிறந்த குழந்தையின் கண்கள் சிவந்திருந்ததால் தாய், "என் கோச் செங்கண்ணனோ" என்றாள். அதுமுதல் அவர் கோச்செங்கட் சோழன் என்றே அழைக்கப்பட்டார். அவர் முற்பிறவியில் செய்த சிவத்தொண்டின் பயனாக இப்பிறப்பிலும் சிவபக்தியில் சிறந்து விளங்கினார். திருவானைக்காவில் ஈசனுக்குக் கோயில் கட்டினார். வேறு பல தலங்களிலும் சிவபெருமானுக்கு மாடக்கோயில்கள் கட்டினார்.


கொச்செங்கட் சோழரைத் திருமங்கை ஆழ்வார் தம் பாடலில் சிறப்பித்துப் பாடி உள்ளார். திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும், சுந்தரரும் தேவாரப் பாடல்களில் கோச்செங்கட் சோழரைச் சிறப்பித்துப் பாடி உள்ளனர். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகக் கோச்செங்கட் சோழ நாயனார் போற்றப்படுகின்றார்.

வரலாறு = history; = சரித்திரம்;
திருவானைக்கா = "tiruvāṉaikkā" - A place near Tiruchirappalli = திரு + ஆனை + கா - திருச்சிராப்பள்ளி அருகே காவிரியின் நடுவே தீவாக அமைந்துள்ள தலம்.
முற்காலம் = once upon a time = பல ஆண்டுகளுக்கு முன்பு;
வனம் = forest = காடு;
வெண்ணாவல் = A kind of rose-apple, m. tr., Eugenia hemispherica; = நாவல்வகை;
சிலந்தி = spider; = ;
சருகு = Dried leaf; = உலர்ந்து வற்றிய இலை;
உதிர்தல் = To drop off, as leaves, fruits; = இலை, பழம் முதலியன தானே கீழே விழுதல்;
வலை = web; = ;
துதிக்கை = elephant's trunk; = தும்பிக்கை;
முகத்தல் = To draw, as water; = மொள்ளுதல்;
அழிபடுதல் = to be destroyed; = சிதைதல்;
பின்னுதல் = to weave; = ;
தாளாத = unable to bear; = பொறுக்கமுடியாத;
இறத்தல் = to die; = சாதல்;
முக்தி = liberation; = வீடுபேறு;
சோழமன்னர் குலம் = family of Chola king; = சோழநாட்டு அரசர் குடும்பம்;
மறுபிறப்பு = next birth; = அடுத்த பிறவி;
கோ = king; = அரசன்; ராஜா;
செங்கண்ணன் = red eyed person; = சிவந்த கண்களை உடையவன்;
அழைக்கப்படுதல் = to be called as; = பெயரிட்டுக் கூப்பிடுதல்;
முற்பிறவி = prior birth; = இப்பிறவிக்கு முன்பு இருந்த பிறப்பு;
சிவத்தொண்டு = service to Siva; = சிவபெருமானுக்குச் செய்யும் திருத்தொண்டு;
பயன் = result; = பலன்;
மாடக்கோயில் = elevated temples built on artificial hillock; = உயரமாகக் கட்டுமலைமேல் அமைந்த கோயில்;
சிறப்பித்தல் = to praise; to admire; to extol; = புகழ்தல்; பாராட்டுதல்; கொண்டாடுதல்;
போற்றப்படுதல் = to be cherished; = துதிக்கப்படுதல்; வணங்கப்படுதல்;


"எவர் எப்படி வழிபட்டாலும் இறைவன் அருள்செய்வான்"
============================
Worship by elephant and spider - Thiruvanaikka history
-------------------------------------------
Thiruvanaikka ("tiruvāṉaikkā") is a place near Tiruchirappalli ("tiruccirāppaḷḷi"). A long time ago it was a forest. There was a sivalingam under a rose-apple tree. An elephant and a spider used to worship that sivalingam. The spider spun a web above the sivalingam to prevent dried leaves from falling on it. The elephant brought water in its trunk and did abhishekam ("abhiṣēka") with it and put flowers on the sivalingam. In this process, the spider web got destroyed. The spider built the web again after that. This kept repeating for many days.

After seeing the elephant destroy its web everyday, one day the spider got very angry. That day, when the elephant came, the spider climbed into its trunk and bit it. The elephant could not bear the pain. It beat its trunk on the ground, fell down, and died. The spider also died at that time.

Siva granted liberation ("mōkṣa") to that elephant. He made that spider take birth in the family of Chola king.

That spider, in its next birth, was born as son of Chola king. The newborn's eyes were red. When the mother saw that, she exclaimed, "My prince is red-eyed!". From then on, he came to be known as Kochengat Chola ("kōcceṅkaṭ cōḻa"). (That name means "the red-eyed Chola king"). On account of his service to Siva in his prior birth, he was a great Siva devotee in this birth too. He built a Siva temple in Thiruvanaikka. He built elevated temples for Siva at many places.

Thirumangai Azhwar ("tirumaṅgai āḻvār") has praised Kochengat Chola in his song. Thirugnana Sambandar ("tiruñāṉa sambandar") , Thirunavukkarasar ("tirunāvukkarasar"), and Sundarar ("sundarar") have mentioned Kochengat Chola in their Thevaram ("tēvāram") songs. Kochengat Chola is cherished as one of the 63 nayanmars ("nāyaṉmār" - canonized devotee of Siva).


"God bestows His grace on devotees regardless of who they are and their mode of worship"

==============

B1-01-14 - எந்தாயும், எனக்கு அருள் - endāyum, eṉakku aruḷ

01-14

எந்தாயும், எனக்கு அருள்
------------------------
எந்தாயும், எனக்கு அருள் தந்தையும் நீ;
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனை ஆள்;
கந்தா; கதிர் வேலவனே; உமையாள்
மைந்தா; குமரா; மறை நாயகனே.
- ( கந்தர் அனுபூதி - 46 )

கந்தனே; ஒளி படைத்த வேலாயுதத்தை உடையவனே;
உமையம்மையின் திருமகனே; என்றும் இளையவனே; வேத நாயகனே;
என் தாயும் நீ; எனக்கு அருள்கின்ற தந்தையும் நீ;
என் மனக்கவலைகளை எல்லாம் தீர்த்து என்னை ஆட்கொள்வாயாக;

எந்தாயும் - our mother and; - எம் தாயும்;
அருள் - bestowing grace; showing mercy; - அருள்கின்ற;
சிந்தாகுலம் - worry; deep sorrow; - மனக்கவலை;
தீர்த்து - remove; destroy; - போக்கி; அழித்து;
ஆள் - To receive or accept, as a protégé; - ஆட்கொள்ளுதல்; அடியவனாக ஏற்றுக்கொள்ளுதல்;
கந்தன் - skanda; - முருகன் திருப்பெயர்களுள் ஒன்று;;
கதிர் வேல் - bright shiny lance; - ஒளியுடைய வேல்;
உமையாள் - "umādēvi"; - உமாதேவி;
மைந்தன் - son; - மகன்;
குமரன் - Young man, youth; - இளைஞன்;
மறை - Veda ("vēda"); - வேதம்;
நாயகன் - Lord, master, chief; - தலைவன்;


"கடவுள் நம் கவலைகளைத் தீர்ப்பார்"

==============
endāyum, eṉakku aruḷ
------------------------
endāyum, eṉakku aruḷ tandaiyum nī;
sindāgulam āṉavai tīrttu eṉai āḷ;
kandā; kadir vēlavaṉē; umaiyāḷ
maindā; kumarā; maṟai nāyagaṉē.
- ( kandar aṉubūdi - 46 )

O Muruga! O Skanda! O Lord holding a shiny lance! O son of Uma! O Youngster! O Lord of the Vedas!
You are my Mother; You are my Father bestowing grace on me;
Please take me as your devotee and destroy my worries (- i.e. grant me happiness);



endāyum - our mother and;
aruḷ - bestowing grace; showing mercy;
sindāgulam - worry; deep sorrow;
tīrttu - remove; destroy;
āḷ - To receive or accept, as a protégé;
kandaṉ - Skanda ("skanda");
kadir vēl - bright shiny lance;
umaiyāḷ - umādēvi;
maindaṉ - son;
kumaraṉ - Young man, youth;
maṟai - Veda ("vēda");
nāyagaṉ - Lord, master, chief;

"God will rid us of worries"

==============

B1-02-A-07 - காரைக்கால் அம்மையார் - மாங்கனி பெற்றது - Karaikkal ammaiyar - receiving mangoes

02-A-07

காரைக்கால் அம்மையார் - மாங்கனி பெற்றது
------------------------
சோழ நாட்டில் காரைக்கால் என்ற துறைமுகப் பட்டினத்தில் தனதத்தன் என்ற ஒரு வணிகர் இருந்தார். அவருக்குப் புனிதவதி என்று ஒரு மகள் இருந்தாள். புனிதவதி மிகுந்த சிவபக்தி உள்ளவளாக வளர்ந்தாள். திருமண வயது வந்தபின் அவளைப் பரமதத்தன் என்ற வணிகனுக்குத் திருமணம் செய்துவைத்தனர். அவர்கள் இருவரும் காரைக்காலில் வாழ்ந்து வந்தனர்.

ஒரு நாள் காலையில் பரமதத்தன் ஒரு ஏவலாள் மூலமாக இரு மாம்பழங்களைத் தன் வீட்டிற்குக் கொடுத்தனுப்பினான். அதன்பின் அவன் வீட்டிற்கு ஒரு சிவனடியார் வந்தார். புனிதவதியார் அவருக்கு உணவு படைத்தார். அப்போது கறிவகைகள் எதுவும் சமைக்கப்படவில்லை. அதனால் இலையில் கணவன் கொடுத்தனுப்பிய மாம்பழங்களுள் ஒன்றைப் பரிமாறினார். அந்தச் சிவனடியார் உண்டு மகிழ்ந்து, அவளை வாழ்த்திவிட்டுச் சென்றார்.

பகலில் பரமதத்தன் உணவு உண்ண வீட்டிற்கு வந்தான். புனிதவதியார் எஞ்சி இருந்த ஒரு மாம்பழத்தை இலையில் இட்டார். அது மிகவும் சுவையாக இருந்தது. அவன் இரண்டாம் மாம்பழத்தையும் இடும்படி சொன்னான். ஆசையாகக் கேட்கும் கணவனுக்கு இட மாம்பழம் இல்லையே என்று புனிதவதியார் மனம் வருந்தினார். உள்ளே சென்று மனம் கசிந்து இறைவனை வேண்டினார். அப்போது சிவனருளால் அவர் கையில் ஒரு மாம்பழம் வந்தது. மிகவும் மகிழ்ந்து அதனைக் கணவனுக்கு இட்டார். அதனை அவன் உண்டான். இந்தப் பழம் முதலில் உண்ட பழத்தைவிட இன்னும் சுவையாக இருந்தது.

"இந்தப் பழம் உனக்கு எங்குக் கிடைத்தது" என்று அவன் கேட்டான். புனிதவதியார் அப்பழம் வந்த உண்மையைச் சொன்னார். அதனைக் கேட்ட அவன், "அப்படி என்றால் சிவனைக் கேட்டு இன்னொரு பழத்தை வரவழைத்து எனக்குத் தா" என்றான். புனிதவதியாரும் உள்ளே சென்று இறைவனை வேண்டினார். இறைவன் அருளால் இன்னொரு மாம்பழம் அவர் கையில் வந்தது. அவர் அதனைக் கணவனிடம் கொடுத்தார். அந்தப் பழத்தை அவன் தன் கையில் வாங்கியவுடன் அது மறைந்துவிட்டது. இந்த அற்புதத்தைக் கண்ட பரமதத்தன் புனிதவதியாரைத் தெய்வம் என்றே கருதினான்.

பின்னாளில் புனிதவதியார் இறைவழிபாட்டில் முழுமையாக ஈடுபட்டார். "காரைக்கால் அம்மையார்" என்று அழைக்கப்பெற்றார்.. இவர் அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர்.

இன்றும் காரைக்காலில் ஆனி மாதத்தில் பௌர்ணமி நாளில் மாங்கனித் திருவிழா நடைபெறுகின்றது.



மாங்கனி = mango fruit; = மாம்பழம்;
துறைமுகப் பட்டினம் = port city; = கடற்கரையில் கப்பல் போக்குவரத்து உள்ள ஊர்;
வணிகர் = merchant; trader; = வியாபாரி;
திருமணம் = marriage; = கல்யாணம்;
ஏவலாள் = servant; = பணிவிடை செய்பவன்; வேலைக்காரன்;
கொடுத்தனுப்புதல் = to send a thing through someone; = ஒருவர் மூலமாக ஒரு பொருளை அனுப்புதல்;
சிவனடியார் = Siva devotee; = சிவபக்தர்;
உணவு படைத்தல் = to serve food;; = சாப்பாடு போடுதல்;
கறிவகைகள் = vegetable dishes; = காய்களால் செய்யப்படும் கறி, கூட்டு, முதலிய உணவு வகைகள்;
கணவன் = husband; = ;
பரிமாறுதல் = to serve food; = இலையில் உணவு இடுதல்;
எஞ்சி இருத்தல் = to remain; to be left behind; = மிஞ்சுதல்;
மனம் கசிதல் = feeling very emotional - with devotion, pity, etc; = உள்ளம் உருகுதல்;
அற்புதம் = wonder; miracle; something that is amazing; = அதிசயம்;
பின்னாளில் = at a later date; = சில காலம் கழிந்தபின்;
இறைவழிபாடு = worship of God; = கடவுளை வணங்குதல்;
முழுமையாக = fully; completely; = ;
ஈடுபடுதல் = to be engaged in; to do something with great interest and focus; = மனம் ஒன்றி ஒன்றைச் செய்தல்;
ஆனி = "āṉi" - name of a month in Tamil calendar - This month occurs during June-July; = தமிழ் மாதங்களில் ஒன்றின் பெயர்;
பௌர்ணமி = full moon; = முழுநிலவு;


"இறைவன் வேண்டுவார் வேண்டுவது எல்லாம் ஈவான்"

==============

Karaikkal ammaiyar - receiving mangoes
----------------------------
There lived a merchant named Danadhaththan in a port city called Karaikkal in Chola country. He had a daughter named Punithavathi. She grew up as an ardent devotee of Siva. When she had grown old enough for marriage, she got married to a merchant named Paramadhaththan. They both lived in Karaikkal.

One morning Paramadhaththan sent two mangoes to his home through a servant. Some time after that, a Siva devotee came to his house. Punithavathi served food to that devotee. At the time, no vegetable dishes were ready. So she served on the plate one of the two mangoes that had been sent by her husband. That devotee enjoyed the food and went on his way after blessing her.

Paramadhaththan came home at noon for lunch. Punithavathi served the remaining mango on his plate. It was very tasty. So he asked for the second mango too. Punithavathi felt bad that she did not have the mango to serve her dear husband. She went inside and prayed intensely. At that moment, with Siva's grace, a mango came into her hands. She felt thrilled and served it to her husband. He ate it. This fruit was tastier than the first fruit.

He asked her about where she got that fruit. Punithavathi told him the truth of how she got that mango. Upon hearing it, he demanded her to ask Siva to get another mango for him. Punithavathi went inside and prayed to Siva. With God's grace another mango came into her hands. She gave that to her husband. As soon as he had received that fruit in his hands, it vanished. Upon seeing seeing this miracle, Paramadhaththan concluded that Punithavathi was a divine person.

At a later date, Punithavathi fully engaged herself in Siva worship. She came to be known as 'Karaikkal ammaiyar'. She is one of the 63 nayanmars.

Even today, the mango festival is celebrated in Karaikkal on the full moon day in the month of Ani (June-July).

Karaikkal ammaiyar - "kāraikkāl ammaiyār" - name of one of 63 canonized siva devotees.
Danadhaththan - "daṉadattaṉ"
Karaikkal - "kāraikkāl " - Name of a coastal town in south India.
Chola - "cōḻa"
Punithavathi - "puṉitavati" ("puṉidavadi" in Tamil pronunciation)
Paramadhaththan - "paramadattaṉ"
Ani - "āṉi" - name of a month in Tamil calendar - This month occurs during June-July.

"God will grant all wishes of His devotees"

==============

B1-01-09 - தனம் தரும் கல்வி தரும் - daṉam tarum kalvi tarum

01-09

தனம் தரும் கல்வி தரும்
------------------------
தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே,
கனம் தரும் பூங்குழலாள், அபிராமி, கடைக்கண்களே,
- ( அபிராமி அந்தாதி - 69 )

மேகம் போல் கரியதும், பூக்கள் அணிந்ததுமான அழகிய கூந்தலை உடைய அபிராமியின் கடைக்கண்கள், அவளை வணங்கும் அடியார்களுக்கு எல்லாச் செல்வங்களையும் தரும்; கல்வியைத் தரும்; என்றும் சோர்வு அடையாத (உறுதியான) மனத்தைத் தரும்; தெய்விக அழகைத் தரும்; மனத்தில் கபடம் (பொய்) இல்லாத உறவினர்களையும் நண்பர்களையும் தரும்; மற்ற நல்ல பொருள்கள் அனைத்தையும் தரும். பெருமையைத் தரும்;

தனம் - wealth; - செல்வம்; ஐஸ்வரியம்;
கல்வி - education; knowledge; - படிப்பு ;
தளர்வு - fatigue; sorrow; - சோர்வு; துக்கம்;
தெய்வம் - God; divinity; - கடவுள்; தெய்வத்தன்மை;
வடிவு - form; body; beauty; - உருவம்; அழகு;
வஞ்சம் - Fraud, deceit; - கபடம்; பொய்;;
இனம் - relatives; companions; friends; - சுற்றம்; துணையாகச் சேரும் கூட்டம்;
அன்பர் - devotee; - பக்தர்; அடியவர்;
கனம் - 1. Cloud; 2. Honor, dignity - 1. மேகம்; 2. பெருமை;
பூங்குழலாள் - a woman wearing flowers on her hair; - பூக்கள் அணிந்த கூந்தலை உடையவள்;
அபிராமி - abhirāmi ( pārvatī, as beautiful) is the name of goddess in tiruk-kaḍavūr; - திருக்கடவூரில் அம்பாள் திருநாமம்;
கடைக்கண் - Benign look; - கடாட்சம்; அருள் நோக்கம்;


"கடவுளை வணங்கினால் எல்லா நன்மைகளும் கிட்டும்"

==============
daṉam tarum kalvi tarum
------------------------
daṉam tarum, kalvi tarum, orunāḷum taḷarvu aṟiyā
maṉam tarum, deyva vaḍivum tarum, neñjil vañjam illā
iṉam tarum, nallaṉa ellām tarum, aṉbar eṉbavarkkē,
gaṉam tarum pūṅguḻalāḷ, abirāmi, kaḍaikkaṇgaḷē,
- ( abirāmi andādi - 69 )

Abhirami ("abhirāmi") wears flowers on Her beautiful, dark hair; Her gracious eyes will bestow upon her devotees all wealth, education, strong mind, beautiful body, honest companions, all other good things, and greatness.


daṉam - wealth;
kalvi - education; knowledge;
taḷarvu - fatigue; sorrow;
vañjam - Fraud, deceit;
iṉam - relatives; companions; friends;
gaṉam - 1. Cloud; 2. Honor, dignity
pūṅguḻalāḷ - a woman wearing flowers on her hair;
abirāmi - abhirāmi ( pārvatī, as beautiful) is the name of goddess in tiruk-kaḍavūr;
kaḍaikkaṇ - Benign look;

"Devotees will receive all the good things by God's grace"

==============