Pages

Wednesday, September 21, 2016

B1-02-B-06 - பிரகலாதன் - Prahlada

02-B-06

பிரகலாதன்
------------------------
ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்று இரண்டு அரக்க சகோதரர்கள் இருந்தனர். விஷ்ணு தமது வராக அவதாரத்தில் ஹிரண்யாக்ஷனை வதம் செய்தார். அதனால் ஹிரண்யகசிபுவிற்கு விஷ்ணுவின்மேல் மிகுந்த கோபம் உண்டானது. அவன் பிரமனை நோக்கித் தவம் செய்தான். பிரமன் அவன்முன் தோன்றி, "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார். "எனக்குப் பிரமனின் சிருஷ்டிகள் எதனாலும் மரணம் ஏற்படக்கூடாது; எந்த ஆயுதத்தாலும் சாவு வரக்கூடாது; தேவர்களாலும் வெல்ல முடியாத வலிமை வேண்டும்" என்றெல்லாம் வரம் கேட்டான். அவன் கேட்ட வரங்களை எல்லாம் பிரமன் கொடுத்தார். அதன்பின் அவன் தேவர்களுக்கு மிகுந்த துன்பம் செய்துவந்தான்.


ஹிரண்யகசிபுவிற்குப் பிரகலாதன் என்று ஒரு மகன் பிறந்தான். அவன் சிறுவயதிலேயே விஷ்ணுவின்மேல் அதிக பக்தி கொண்டிருந்தான். எப்போதும் திருமாலின் பெயர்களைச் சொல்லி அவரை வழிபட்டான். "திருமாலை வழிபடாதே" என்று பிரகலாதனின் ஆசிரியர்களும் ஹிரண்யகசிபுவும் அவனிடம் பலமுறை சொன்னார்கள். ஆனால் அவர்கள் பேச்சைப் பிரகலாதன் ஏற்கவில்லை. திருமால் நாமத்தையே திரும்பத் திரும்பச் சொன்னான். ஹிரண்யகசிபு தன் சொல்லைக் கேளாத பிரகலாதனைக் கொல்ல ஆணையிட்டான். பல வித தண்டனைகள் கொடுத்தார்கள். ஆனாலும் பிரகலாதனுக்கு ஒன்றும் ஆகவில்லை.

பிரகலாதனை ஹிரண்யகசிபுவின் முன் நிறுத்தினார்கள். "நீ கடவுள் என்று சொல்லும் அந்த விஷ்ணு எங்கே இருக்கிறான்" என்று ஹிரண்யகசிபு கேட்டான். "அவர் தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்" என்று பிரகலாதன் சொன்னான். அதனைக் கேட்டதும் ஹிரண்யகசிபு, "உன் திருமால் இந்தத் தூணில் இருக்கிறானா? அதையும்தான் பார்த்துவிடுவோம்" என்று கத்தினான். தன்னிடம் இருந்த ஆயுதத்தால் பக்கத்தில் இருந்த தூணில் ஓங்கி அடித்தான்.


அப்போது அந்தத் தூண் இரண்டாகப் பிளந்தது. அங்கே திருமால் ஒரு புதிய உருவில் தோன்றினார். பாதி மனித உடலும் பாதி சிங்க உடலுமாக நரசிம்மமாகக் காட்சி அளித்தார். ஹிரண்யகசிபுவைப் பிடித்துத் தமது மடியில் கிடத்தினார். தம் நகங்களால் ஹிரண்யகசிபுவின் வயிற்றைக் கிழித்து அவனை அழித்தார்.


பிரகலாதன் நரசிம்மரை வலம் செய்து வணங்கினான். நரசிம்மரும் சாந்தம் அடைந்து அவனுக்கு அருள்புரிந்தார்.

அரக்கன் = Rakshasa - demon; = ராக்ஷசன்;
சகோதரன் = brother; = உடன்பிறந்தவன்; கூடப்பிறந்தவன்;
வராகம் = pig; boar; = பன்றி;
அவதாரம் = incarnation of Vishnu; to be born, as when a god descends to become a creature; = ;
வதம் செய்தல் = to kill; to destroy an evil being; = கொல்லுதல்; அழித்தல்;
பிரமனின் சிருஷ்டிகள் = anything that is created by Brahma; = பிரம்மாவால் படைக்கப்பட்டவை;
மரணம் = death; = சாவு; இறப்பு;
ஆயுதம் = weapon; = படை;
வலிமை = strength; = ஆற்றல்; சக்தி;;
துன்பம் = misery; trouble; = வருத்தம்; கெடுதி;
திருமால் = Vishnu; = விஷ்ணு;
பலமுறை = many times; = ;
பேச்சு = words; = வார்த்தை;
ஏற்றல் = to accept; to agree; = ஒப்புக்கொள்ளுதல்;
ஏற்கவில்லை = did not listen to; did not accept; = ;
நாமம் = name; = பெயர்;
திரும்பத் திரும்ப = again and again; repeatedly; = மீண்டும் மீண்டும்;
ஆணையிடுதல் = to issue an order or command; = கட்டளையிடுதல்;
தண்டனை = punishment; = சிட்சை;
ஆனாலும் = however; = ஆயினும்;
தூண் = pillar; = தம்பம்;
துரும்பு = bits of straw; any insignificantly small thing; trifle; = கூளம்; அற்பமான பொருள்;
கத்துதல் = to shout; to scream; = கூவுதல்;
ஓங்குதல் = To lift up, raise, as the arm or a weapon; = உயர்த்துதல்;
அடித்தல் = to hit; to beat; to strike; = புடைத்தல்; தாக்குதல்;
பிளத்தல் = to be split; to be cracked; split open; to break open; = போழ்தல்;
உரு = form; = உருவம்; வடிவம்;
நரசிம்மம் = a form of Vishnu that is half man half lion; = நரசிங்கமூர்த்தி - திருமாலின் அவதாரங்களுள் ஒன்று;
காட்சி அளித்தல் = to appear or manifest oneself, as God to worshipers; = காட்சி கொடுத்தல்; தரிசனம் அளித்தல்;
மடி = lap; = மடித்த தொடையின் மேற்பாகம்;
கிடத்துதல் = to place in a recumbent posture, lay to rest; = கிடக்கச்செய்தல்;
ம் = nail; claw; = உகிர்; பறவை, விலங்குகளின் உகிர்;
ழித்தல் = to destroy; to kill; = கொல்லுதல்; சம்ஹாரம் செய்தல்;
வலம் செய்தல் = to go around a person or a place during worship; = பிரதட்சிணம் செய்தல்;
சாந்தம் அடைதல் = to calm down; = அமைதிகொள்ளுதல்;



"இறைவன் இல்லாத இடமே இல்லை"

==============

Prahlada
---------------
Once there were two rakshasa brothers named Hiranyaksha and Hiranyakasipu. Vishnu, during His Varaha (boar) incarnation, killed Hiranyaksha. Hence, Hiranyakasipu became very angry with Vishnu. He did penance and prayed to Brahma. Brahma appeared in front of him and asked him, "What boon do you want?". Hiranyakasipu said, "My death should not be caused by any of Brahma's creations. My death should not be caused by any weapon. I should be stronger than the Devas". Brahma granted him all the boons he wanted. Thereafter, Hiranyakasipu gave a lot of trouble to the Devas.

A son named Prahlada was born to Hiranyakasipu. Even at a young age, Prahlada had intense devotion to Vishnu. He always chanted Vishnu's names and worshiped Him. Prahlada's teachers and Hiranyakasipu told him many times, "Do not worship Vishnu". However, Prahlada did not listen to their words. He kept repeating Vishnu's names. Hiranyakasipu ordered that Prahlada, who did not obey his command, should be killed. They tried many different punishments. However, Prahlada remained unharmed.

They took Prahlada to Hiranyakasipu. Hiranyakasipu asked him, "Where is that Vishnu, who you say is the God?". Prahlada replied, "He is everywhere, whether it is a pillar or a trifle". When he heard that, Hiranyakasipu shouted, "Is your Vishnu in this pillar? Let us see!". He raised his weapon and hit the nearby pillar.

Then that pillar split apart into two pieces. Vishnu appeared in a new form. He appeared as Narasimha with a body that was half human and half lion. He grabbed Hiranyakasipu and laid him on His lap. With His claws He tore apart Hiranyakasipu's stomach and killed him.

Prahlada went around Narasimha and worshiped Him. Narasimha became pacified and bestowed His grace on Prahlada.


Prahlada - "prahlāda"
Hiranyaksha - "hiraṇyākṣa"
Hiranyakasipu - "hiraṇyakaśipu"
Varaha - "varāha"
Brahma - "brahma"
Narasimha - "narasiṁha"



"God is everywhere"

==============

No comments:

Post a Comment