Pages

Wednesday, September 21, 2016

B1-01-12 - ஐந்து கரத்தனை - aindu karattaṉai

01-12

ஐந்து கரத்தனை
------------------------
ஐந்து கரத்தனை, ஆனை முகத்தனை,
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை,
நந்தி மகன் தனை, ஞானக் கொழுந்தினைப்,
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.


ஐந்து கைகளை உடையவனை, யானை முகத்தை உடையவனைச், சந்திரனின் இளம் பிறை போன்ற தந்தத்தை உடையவனைச், சிவனுக்குப் புதல்வனை, ஞானச் சுடரை, அந்த விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவன் திருவடிகளைத் துதிக்கின்றேன்.

ஐந்து கரத்தனை - one with five hands - ஐந்து கைகளை உடையவனை;
னை முகத்தனை - one with elephant face - யானை போன்ற திருமுகம் உடையவனை;
இந்து - moon - சந்திரன்;
பிறை - crescent moon - பிறைச்சந்திரன்;
எயிறு - tusk; tooth; - தந்தம்; பல்;
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை - one with a tusk like crescent moon - சந்திரனின் இளைய பிறை போல் உள்ள தந்தம் உடையவனை;
நந்தி - a name of Siva; - நந்தி என்பது சிவன் திருநாமங்களுள் ஒன்று;
நந்தி மகன் தனை - Siva's son; (Nandi is one of the names of Siva); - நந்தி என்ற திருநாமம் உடைய சிவனுக்கு மகனை;
ஞானம் - knowledge; wisdom - அறிவு ;
கொழுந்து - flame - சுவாலை; சுடர்;
ஞானக் கொழுந்தினை - one who is the flame of knowledge - ஞானச் சுடரை;
புந்தி - mind - உள்ளம்; மனம்;
புந்தியில் வைத்து - I keep in my mind - உள்ளத்தில் வைத்து;
அடி போற்றுகின்றேனே - and worship His feet - அவன் திருவடிகளை வணங்குகின்றேன்;


"இறைவன் திருஉருவத்தை மனத்தில் எண்ணி வழிபடவேண்டும்"

==============
aindu karattaṉai
------------------------
aindu karattaṉai, āṉai mugattaṉai,
indiṉ iḷam piṟai pōlum eyiṭraṉai,
nandi magaṉ taṉai, ñāṉak koḻundiṉaip,
pundiyil vaittu aḍi pōṭrugiṇḍrēṉē.

Ganesa has five hands, has an elephant face, has a curved tusk that looks like crescent moon. He is the son of Siva. He is the embodiment of flame of knowledge. I keep His holy form in my mind and worship Him.


aindu karattaṉai - one with five hands ;
āṉai mugattaṉai - one with elephant face ;
indiṉ iḷam piṟai pōlum eyiṭraṉai - one with a tusk like crescent moon ;
nandi magaṉ taṉai - one who is Siva's son; ("nandi" is one of the names of Siva);
ñāṉak koḻundiṉai - one who is the flame of knowledge;
pundiyil vaittu - Him I keep in my mind ;
aḍi pōṭrugiṇḍrēṉē - and worship His feet ;

"We should keep God's holy form in our mind and worship"
==============

1 comment:

  1. படங்களும் சேர்த்து வெளியிட்டால் குழந்தைகள் படிக்க வாய்ப்பாக இருக்கும்

    ReplyDelete