Pages

Wednesday, September 21, 2016

B1-01-10 - பச்சை மா மலை போல் - paccai mā malai pōl

01-10

பச்சை மா மலை போல்
------------------------
"பச்சை மா மலை போல் மேனி, .. பவள வாய்க், கமலச் செங்கண்
அச்சுதா; அமரர் ஏறே; .. ஆயர் தம் கொழுந்தே" என்னும்
இச்சுவை தவிர யான் போய் .. இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் .. அரங்க மா நகர் உளானே.
---- (திவ்வியப் பிரபந்தம் - தொண்டரடிப்பொடி ஆழ்வார்)

ஸ்ரீரங்கத்தில் உறைகின்ற திருமாலே! உன்னை, "அழகிய பச்சை மலைபோன்ற பெரிய திருமேனி உடையவனே! பவளம் போன்ற சிவந்த வாயும் தாமரை போன்ற சிவந்த கண்களும் உடைய அச்சுதனே! தேவர்கள் தலைவனே! இடையர்களின் செல்வமே" என்று துதிக்கின்ற இந்த இன்பத்தைத் தவிர, இந்திர லோகத்தை ஆள்கின்ற இன்பமே பெறுவதாக இருந்தாலும் அதனை நான் விரும்பமாட்டேன்.

மேனி - body; - உடம்பு ;
பச்சை மா மலை போல் மேனி - having a body like a great beautiful dark mountain - பசுமை நிறமுள்ள அழகிய பெரிய மலை போன்ற மேனியையும்;
பவள வாய் - and mouth like red coral - பவளம் போன்ற சிவந்த வாயையும்;
கமலம் - lotus; - தாமரை; தாமரைப்பூ;
கமலச் செங்கண் - and eyes like red lotus - தாமரை மலர்போன்ற சிவந்த கண்களையும் உடைய
அச்சுதன் - achyutha - one who is imperishable, permanent; a name of Vishnu; - விஷ்ணுவின் திருப்பெயர்களுள் ஒன்று - "நிலைத்து இருப்பவன்" என்று பொருள்படும்; (அச்சுதா - O achyutha - அச்சுதனே!)
அமரர் - devas - தேவர்;
அமரர் ஏறே - O Lord of the devas - தேவர் தலைவனே!
ஆயர் - cowherds - இடையர்கள்;
கொழுந்து - tender leaf, shoot; - இளம் தளிர்;
ஆயர்தம் கொழுந்தே - O darling of the cowherds - இடையர்களின் செல்வமே;
என்னும் - praising You thus - என்று சொல்கின்ற;
சுவை - taste - ருசி ;
இச்சுவை - this sweet taste - இந்த இன்பத்தை;
தவிர - leaving this - விட்டு; நீங்கி;
யான் - I - நான் ;
யான் போய் - I go and - நான் சென்று;
இந்திர லோகம் ஆளும் - enjoy being the ruler of the heavens, (celestial world of Indra) - இந்திரலோகத்தை ஆள்கின்ற;
அச்சுவை - that enjoyment - அந்த இன்பத்தை;
பெறுதல் - to get; to receive; - அடைதல்; (பெறினும் - even I were to get it - அடைவதாயிருந்தாலும்;)
வேண்டுதல் - to seek; to desire; to want; - விரும்புதல். (வேண்டேன் - I do not want it - (அதனை) விரும்பமாட்டேன்.)
அரங்க மா நகர் உளானே - O Lord dwelling in Srirangam - ஸ்ரீரங்கத்தில் உறைகின்றவனே;


"இறைவன் புகழைப் பாடுவதே பெரிய இன்பம்"

==============
paccai mā malai pōl
------------------------
"paccai mā malai pōl mēṉi, .. pavaḷa vāyk, kamalac ceṅgaṇ
accudā; amarar ēṟē; .. āyar tam koḻundē" eṉṉum
iccuvai tavira yāṉ pōy .. indira lōgam āḷum
accuvai peṟiṉum vēṇḍēṉ .. araṅga mā nagar uḷāṉē.
---- (tivviyap pirabandam - toṇḍaraḍippoḍi āḻvār)

O Vishnu dwelling in Srirangam! I enjoy praising You variously like, "O Lord with a body like a big beautiful dark mountain! O Achyutha with coral-like mouth and lotus-like red eyes! O Ruler of the Devas! O Darling of the cowherds!", more than anything else! Even if I were to get to rule the celestial world of Indra, I do not want it!


paccai mā malai pōl mēṉi - having a body like a great beautiful dark mountain ;
pavaḷa vāy - and mouth like red coral ;
kamalac ceṅgaṇ - and red eyes like lotus ;
accudā - O Achyutha ("achyuta" - one who is imperishable, permanent; a name of Vishnu;)
amarar ēṟē - O Lord of the devas ;
āyardam koḻundē - O Darling of the cowherds ;
eṉṉum - praising You thus ;
iccuvai - this sweet taste ;
tavira - leaving this ;
yāṉ pōy - I go and ;
indira lōgam āḷum - enjoy being the ruler of the heavens, (celestial world of Indra) ;
accuvai - that enjoyment ;
peṟiṉum - even if I were to get it ;
vēṇḍēṉ - I do not want it ;
araṅga mā nagar uḷāṉē - O Lord dwelling in Srirangam ;

"Singing glories of God is the greatest joy"

==============

No comments:

Post a Comment